Map Graph

புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் அமைந்துள்ள கல்லூரி

புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் சிவபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 1994 -ஆம் ஆண்டு சனவரி மாதம் 17-ஆம் நாள் அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் க. பொன்னுசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுகையின்கீழ் செயல்படுகிறது. கல்லூரியில் கலை, வணிகம், அறிவியல் படிப்புகள் இளநிலை, முதுநிலையில் கற்பிக்கப்படுகின்றன.

Read article
படிமம்:J.J._College_of_Arts_and_Science_(_Autonomous),_Pudukkottai.jpg